கண்ணியக்குறைவாக பேசவேண்டாம் - மு.க ஸ்டாலின் அறிவுரை
திமுகவினர் பரப்புரையின்போது கண்ணியமாக பேசவேண்டுமென மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுகவின் வெற்றி மக்களால் தீர்மானிக்கப்பட்டு விட்டதால் தோல்வி பயத்தில், திமுகவினரின் பேச்சுகளை திரித்து, வெட்டி, ஒட்டி வெற்றியை தடுக்க நினைக்கின்றனர் எனக் கூறியுள்ளார் மு.க ஸ்டாலின். முதல்வரை ஆ.ராசா அவதூறாக பேசினார் என சர்ச்சை எழுந்த நிலையில் கட்சியினருக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் திமுகவினர் கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் எனவும், பரப்புரை செய்யும்போது திமுகவின் மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படுங்கள் எனவும், கண்ணியக்குறைவான பேச்சுக்களை கட்சித்தலைமை ஒருபோது ஏற்காது எனவும் அவர் கூறியிருக்கிறார்.
முன்னதாக, ஆ.ராசாவும் தனது பேச்சு வெட்டி, ஒட்டி திரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம்கொடுத்திருந்தார். அதேபோல் திண்டுக்கல் லியோனியின் பேச்சுக்களும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.