\
‘ஓஎன்ஜிசிக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்’

‘ஓஎன்ஜிசிக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்’

‘ஓஎன்ஜிசிக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்’
Published on

விவசாயிகளின் கருத்து கேட்காமல் அதிமுக ஆட்சியில் ஓ.என்.ஜி.சிக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்ட பின்பே குத்தகை உரிமத்தை அதிமுக அரசு வழங்கியிருக்க வேண்டும் என்று கூறினார்.

அதிமுக அரசின் அவசரத்தால் குழாய்கள் வெடிக்கும்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை விமர்சித்துள்ள ஸ்டாலின், இவ்விவகாரத்தில் கைது செய்வதில் காட்டும் முனைப்பை மக்கள் நலன் காப்பதில் அரசு காட்டவில்லை என குற்றம்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com