டிரெண்டிங்
மத்திய குழு டெங்குவின் உண்மை நிலையை கூற வேண்டும்: ஸ்டாலின்
மத்திய குழு டெங்குவின் உண்மை நிலையை கூற வேண்டும்: ஸ்டாலின்
டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் குறித்த உண்மை நிலையை மத்திய குழு தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துக் குழு வருகை தந்தது. ஆனால் இதுவரை ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தவில்லை. அதேபோன்று இல்லாமல் டெங்கு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக் குழு, உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அந்தக் குழு உண்மையிலேயே டெங்குவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.” என்று கூறினார்.

