மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்கிறார் ஸ்டாலின்: திருமாவளவன்

மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்கிறார் ஸ்டாலின்: திருமாவளவன்

மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்கிறார் ஸ்டாலின்: திருமாவளவன்
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநில சுயாட்சி மாநாட்டில் முக.ஸ்டாலின் பங்கேற்க இசைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை ராயபுரத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விசிக சார்பில் மாநில சுயாட்சியை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை சென்னை அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் வழங்கினார்.

பின்னர் பேசிய திருமாவளவன், மாநாட்டில் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுவார் என தெரிவித்தார். மேலும், ஒத்த கருத்துடைய பிற கட்சி தலைவர்களுக்கும் தாம் அழைப்பு விடுக்க இருப்பதாகக் கூறினார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், பாஜகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட மண் என்றும், இங்கு மத அரசியலுக்கு, சாதி அரசியலுக்கு மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள் என்றும், சாதியவாத மதவாத சக்திகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்றும் திருமாவளவன் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com