\
முழுவதும் மழைநீர் தேங்கிய திருமழிசை சந்தை: வியாபாரிகள் அவதி

முழுவதும் மழைநீர் தேங்கிய திருமழிசை சந்தை: வியாபாரிகள் அவதி

முழுவதும் மழைநீர் தேங்கிய திருமழிசை சந்தை: வியாபாரிகள் அவதி
Published on

திருமழிசை காய்கறிகள் சந்தையில் மழை நீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கோயம்பேட்டில் மூடப்பட்ட காய்கறிகள் சந்தை தற்காலிகமாக திருமழிசை துணை நகரத்தில் செயல்பட்டு வருகிறது. முறையான இடம், சாலை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தாலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து திருமழிசையில் காய்கறி சந்தையை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் இரவு பெய்த கன மழை காரணமாக காய்கறி சந்தை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. கடைகள் உள்ளே மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர். 

இதனால் லாரிகளில் வந்த 5 ஆயிரம் டன் காய்கறிகளை எங்கு இறக்கி விற்பனை செய்வது என்பது தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே சேமிப்பு கிடங்கு இல்லாமல் காய்கறிகள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் வீணாக குப்பைக்கு செல்வதாகவும் தற்போது மழைக் காலம் என்பதால் காய்கறிகளை எப்படி விற்பனை செய்வது என்பது தெரியாமல் திணறி வருவதாகவும் வியாபாரிகள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் உடனடியாக மழை நீர் தேங்காமல் இருக்க கோயம்பேடு மார்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com