இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனவரியில் தேர்தல்?

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனவரியில் தேர்தல்?
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனவரியில் தேர்தல்?

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்கே கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மகிந்த ராஜபக்ச கட்சிக்கு தாவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது, குழப்பமான நிலை முடிவுக்கு வரும்  எதிர்பார்க்கப்படுகிறது. 

நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. எனவே தேவையான எம்.பி.,க்களை தங்கள் வசம் இழுக்க ராஜபக்ச தரப்பு முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே இலங்கை அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஒருவரே இந்தத் தகவலை தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது.

225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு அவருக்கு எம்.பிக்கள் இல்லை என்பதால் இந்த முடிவை அதிபர் சிறிசேன எடுத்துள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நாடாளுமன்றத்திற்கான பதவிக்காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே கலைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் சிறிசேன வெளியிட்டுள்ள உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதிபர் சிறிசேனவின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com