\
துளிர்க்கும் நம்பிக்கை: உதவிக்கரம் நீட்டிய முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட அமைப்பினர்

துளிர்க்கும் நம்பிக்கை: உதவிக்கரம் நீட்டிய முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட அமைப்பினர்

துளிர்க்கும் நம்பிக்கை: உதவிக்கரம் நீட்டிய முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட அமைப்பினர்
Published on

துளிர்க்கும் நம்பிக்கை மூலம் விழுப்புரத்தில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட அமைப்பினர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கால் விழுப்புரம் மாவட்டத்தில் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வரும் பலருக்கு, சில தேவைகளை செய்துவரும் துளிர்க்கும் நம்பிக்கை அமைப்புடன் இணைந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுமார் 25 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை துளிர்க்கும் நம்பிக்கை மூலமாக அறிந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட அமைப்பின் மாநில பொருளாளர் கருணாகரன் உதவினார். புதிய தலைமுறையின் இந்த செயலுக்கு தன்னுடைய பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com