துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் முதுகு தண்டுவடம் பாதிப்பட்ட நபர்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் முதுகு தண்டுவடம் பாதிப்பட்ட நபர்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் முதுகு தண்டுவடம் பாதிப்பட்ட நபர்
Published on

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட கருணாகரன் என்பவர் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு துளிர்க்கும் நம்பிக்கையுடன் இணைந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் கருணாகரன். தியாகதுருகம் பகுதியில் வசித்துவரும் இவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு அமைப்பின் மாநில பொருளாளராக உள்ளார்.

இந்நிலையில், புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சியை பார்த்து அந்த பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என நினைத்து இன்று சுமார் 20 பேரை வரவழைத்து அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார் தொடர்ந்து தன்னால் இயன்றதை இல்லாதவர்களுக்கு செய்வதாக கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com