சந்தோஷமா வாங்க பாதுகாப்பா இருந்துட்டு போங்க கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு கேரள சுற்றுலா துறை அழைப்பு

சந்தோஷமா வாங்க பாதுகாப்பா இருந்துட்டு போங்க கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு கேரள சுற்றுலா துறை அழைப்பு

சந்தோஷமா வாங்க பாதுகாப்பா இருந்துட்டு போங்க கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு கேரள சுற்றுலா துறை அழைப்பு
Published on

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவும், காங்கிரஸ்-மஜதவும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெஜாரிட்டியை நிரூபிக்க பாஜவுக்கு 2 அல்லது 3 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. அப்போது, பாஜகவிடம் இருந்து தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி முயற்சிக்கும். அதனால், குஜராத் எம்.எல்.ஏக்களை பெங்களூர் அருகே ரிசாட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தது போல், தற்போதும் நடக்க வாய்ப்புள்ளது.

கர்நாடகாவின் தற்போதைய சிக்கலான அரசியல் சூழலை கிண்டல் அடிக்கும் வகையில் கேரள அரசின் சுற்றுலா துறை தனது ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளது. “கர்நாடக தேர்தல் முடிவுகள் சிக்கலாக முடிந்துள்ளதால், அனைத்து எம்.எல்.ஏக்களையும் கடவுளின் தேசத்திற்கு அழைக்கின்றோம். இங்குள்ள ரிசார்ட்கள் மிகவும் அழைகானவை, பாதுகாப்பானவை” என்று கேரள சுற்றுலா துறை குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com