100‌% வாக்குப்பதிவிற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு சைகை மொழி பயிற்சி

100‌% வாக்குப்பதிவிற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு சைகை மொழி பயிற்சி
100‌% வாக்குப்பதிவிற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு சைகை மொழி பயிற்சி

காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை வாக்குப்பதிவு நாள் அன்று எதிர்கொள்ளும் தேர்தல் அலுவலர்களுக்கு, 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.

நடைபெறும் மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தகுதியான வாக்காளர்கள் ஆன முதியோர், மாற்றுத்திறனாளிகளையும் பட்டியலில் இணைத்து ஜனநாயக கடமையாற்ற செய்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

இதற்காக மாவட்டத்தில் இருக்கும் 21193 மாற்றுத்திறனாளிகளில் 3956 காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து ஓட்டளிக்க செய்ய, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குபதிவு நாள் அன்று அவர்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் வாக்களிக்க தேர்தல் அலுவலர் பணியாளருக்கு 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறுகையில், மாவட்டத்தில் மொத்தம் 21,193 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 3956 காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். இவர்கள் அனைவரும் வாக்குப்பதிவு அன்று எந்தவொரு சிரமமும் இல்லாமல் வாக்களிக்க தேர்தல் அலுவலர்களுக்கு 'சைகை' மொழியை, சைகை மொழி பயிற்சி ஆசிரியர்களை வைத்து மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏறத்தாழ 1800-க்கும் அதிகமாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு நேரடியாக மாதிரி வாக்கு இயந்திரங்களை கொண்டு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com