\
பணி நேரத்தில் பாரில் மது அருந்திய விவகாரம் : விருதுநகரில் சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்

பணி நேரத்தில் பாரில் மது அருந்திய விவகாரம் : விருதுநகரில் சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்

பணி நேரத்தில் பாரில் மது அருந்திய விவகாரம் : விருதுநகரில் சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்
Published on

விருதுநகர் அருகே உள்ள மதுபானக் கடையில், பணியில் இருந்தபோது மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள மத்தியசேனையில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில், பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன், சீருடையில் மது அருந்தும் காட்சிகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவின. பணியில் இருந்த அவர் சீருடையிலும், வாக்கி டாக்கியுடனும் பாரில் மது அருந்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த காட்சிகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளின் கவனத்திற்கு புதியதலைமுறை கொண்டு சென்றது. இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோடீஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com