டிரெண்டிங்
ஆர்.கே.நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
ஆர்.கே.நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வாக்கு மையங்களில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம், மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், பிழைகளை நீக்கவும் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
நாளை மறுநாள் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக மாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை வீடுவீடாக பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.