சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது, குறுக்கிட்ட சபாநாயகர் தனபால் அவரைக் கிண்டலடித்தார்.
சட்டப்பேரவையில் மீன் தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமாரை சபாநாயகர் கிண்டலடித்த சுவாரஸ்யம் நிகழ்ந்தது. மீன் சாப்பிட்டால் கேன்சர் வராது, பார்வைத் திறன் அதிகரிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால் மீன் அதிகம் சாப்பிடுவதால் தான் ஜெயக்குமார் கண்ணாடி அணிந்துள்ளார் என கிண்டலாக பேசினார்.

