தென்மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டில் அநீதி: நிதியமைச்சர்கள் ஆலோசனை!

தென்மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டில் அநீதி: நிதியமைச்சர்கள் ஆலோசனை!
தென்மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டில் அநீதி: நிதியமைச்சர்கள் ஆலோசனை!

தென்மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி  ஒதுக்கீடு குறைக்கப்பட உள்ளதால் தென்மாநிலங்களின் நிதியமைச்சர்களின் ஆலோசனை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
 
15வது நிதிக் குழுவின் மத்திய அரசின் தென்மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட உள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசின் நிதிக் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிப்பதற்காக தென் மாநில நிதியமைச்சர்களின் சந்திப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.இக்கூட்டம் குறித்து பேசிய கேரள நிதியமைச்சர் கே.எம் தாமஸ், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க 15வது நிதிக் கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், இது தென்மாநிலங்களை வெகுவாக பாதிக்கும் எனவும் 1971க்கு பின்னர் மக்கள் தொகை பெருக்க விகிதத்தை தென்மாநிலங்கள் கணிசமாக குறைத்துள்ள நிலையில் அதையே காரணமாக வைத்து நிதி ஒதுக்கீட்டை குறைப்பது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தாமஸ் தெரிவித்தார். எனவே மிக முக்கியமான இவ்விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். நிதி பகிர்வில் அநீதி இழைக்கப்படுவதாக ஆந்திர, கர்நாடக முதல்‌வர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.மக்கள் தொகை பெருக்கத்தை குறைத்ததற்கு நிதி ஒதுக்கீட்டை குறைப்பதுதான் பரிசா என கேரள நிதியமைச்சர் கே.எம் தாமஸ் கேள்வி எழுப்பினார். 

ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com