லதா மங்கேஷ்கர் பாடலை இனிமையாக பாடிய பெண்.. ஆச்சர்யத்தில் சோனு சூட் போட்ட ட்வீட்!

லதா மங்கேஷ்கர் பாடலை இனிமையாக பாடிய பெண்.. ஆச்சர்யத்தில் சோனு சூட் போட்ட ட்வீட்!
லதா மங்கேஷ்கர் பாடலை இனிமையாக பாடிய பெண்.. ஆச்சர்யத்தில் சோனு சூட் போட்ட ட்வீட்!

எட்டாக்கனியாக இருக்கும் எவரது திறமையும் சமூக வலைதளங்களால் அம்பலமாகி பலரது வாழ்க்கையும் உச்சத்தை அடைந்திருக்கிறது என்றே கூறலாம். டிக்டாக் தொடங்கி தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வரை எண்ணற்ற சமூக வலைதள பயனர்கள் தொடர்ந்து தங்களது பாட்டு, நடனம், நடிப்பு போன்ற பல தரப்பட்ட திறன்களை வீடியோக்களாக பதிவிட்டு லட்சக் கணக்கானோரை ஈர்த்து வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் தகுதிக்கேற்ற துறைகளில் நல்ல வரவேற்போடு அங்கீகாரமும் கிடைத்து வருகிறது.

அந்த வகையில், பெண் ஒருவர் தனது மகளுக்காக பாடும் பாடலின் வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேலானோரால் ரசிக்கப்பட்டும் இருக்கிறது. அந்த ட்விட்டர் பதிவில், கிளாசிக் பாலிவுட் படமான மெஹ்பூபாவில் லதா மங்கேஷ்கர் பாடிய ‘Mere Naina Sawan Bhadon’ என்ற பாடலை மெல்லிசை மாறாமல் அந்த பெண்ணும் சமைத்துக் கொண்டே பாடுகிறார்.

<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">नंबर भेजिए <br>माँ फ़िल्म के लिए गाना गाएगी  <a href="https://t.co/rLebxFRhWX">https://t.co/rLebxFRhWX</a></p>&mdash; sonu sood (@SonuSood) <a href="https://twitter.com/SonuSood/status/1619006850867023872?ref_src=twsrc%5Etfw">January 27, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த வீடியோவை கண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட், அதனை பகிர்ந்ததோடு, “அந்த பெண்ணின் ஃபோன் நம்பர் இருந்தால் அனுப்புங்கள். அவர் திரைப்பட பாடலையும் பாடுவார்” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். சாமானிய பெண் பாடிய பாடல் இந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருப்பதே மிகப்பெரிய ஆச்சர்யம், கூடுதலாக சோனு சூட் படத்தில் பாட வைப்பதாகவும் கூறியிருப்பது பாராட்டுதலுக்குரியது என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு பல வகையில் உதவிகளை புரிந்த சோனு சூட், பல ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் காரணமாக இருந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com