காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியாகாந்தி விலகுகிறாரா?

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியாகாந்தி விலகுகிறாரா?

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியாகாந்தி விலகுகிறாரா?
Published on

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியாகாந்தி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியகாந்தி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றிருந்தார். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தியே மீண்டும் பொறுப்பேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியாகாந்தி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com