\
தாய் தற்கொலை செய்ததை கண்டு மகனும் தற்கொலை : ஏன் தெரியுமா?

தாய் தற்கொலை செய்ததை கண்டு மகனும் தற்கொலை : ஏன் தெரியுமா?

தாய் தற்கொலை செய்ததை கண்டு மகனும் தற்கொலை : ஏன் தெரியுமா?
Published on

பெருந்துறை அருகே தாய் தற்கொலை செய்துகொண்டதையடுத்து மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரத்தை சேர்ந்தவர் ருக்குமணி(70). இவரது மகன் முத்துசாமி(40). திருமணம் ஆகாதவர். ருக்குமணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக மாத்திரை உட்கொண்டு வருகிறார். முத்துசாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தாய் ருக்குமணி மகனை கண்டித்துள்ளார். ஆனால் முத்துசாமி அதை கண்டுகொள்ளாமல் சொத்துக்களை விற்று குடித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி வீட்டில் சண்டை வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ருக்குமணி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த மகன் முத்துசாமியும் பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த ருக்குமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்றில் விழுந்து உயிரிழந்த முத்துசாமியின் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com