டிரெண்டிங்
‘கிட்ட வாங்க பார்ப்போம்’ காவலர்களுக்கு படம் காட்டிய நல்ல பாம்பு..!
‘கிட்ட வாங்க பார்ப்போம்’ காவலர்களுக்கு படம் காட்டிய நல்ல பாம்பு..!
ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியிருந்த நிலையில், ரோந்து பணிக்குச் சென்ற காவலர்களிடம் நல்ல பாம்பு ஒன்று சீறிய காட்சி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெறிச்சோடிய சாலையில் ஊர்ந்து வந்த நல்ல பாம்பை பிடிக்க காவல்துறையினர் முயன்றுள்ளனர்.
உஷாரான அந்த பாம்பு, படமெடுத்தபடி சீறியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த காவலர்கள் உயிரின ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த செல்லா, நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டார். காவலர்களை மிரட்டிய நல்ல பாம்பு விஷத்தன்மை கொண்டது எனப்படுகிறது.