டிரெண்டிங்
வட்டார கல்வி அலுவலகத்தில் புகுந்த சாரைப்பாம்பு: சிதறி ஓடிய அலுவலர்கள்
வட்டார கல்வி அலுவலகத்தில் புகுந்த சாரைப்பாம்பு: சிதறி ஓடிய அலுவலர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டார கல்வி அலுவலகத்தில் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு புகுந்தது. இதனால், அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் அலுவலர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது சுமார் 12 மணி அளவில் வட்டார கல்வி அலுவலகத்தில் பாம்பு ஒன்று வருவதை கண்டு அலுவலர்கள் அலறி வெளியே வந்தனர்.
பின்னர் அலுவலகத்தில் உள்ளே இருந்த மற்ற அலுவலர்களும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறை ஊழியர்கள் கல்வி அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரம் போராடி பாம்பை பிடித்தனர். இதனால், அங்கு சிறிது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.