அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனுத்தாக்கல்

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனுத்தாக்கல்
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனுத்தாக்கல்

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில்‌‌ மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கடந்த 2014 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார் ஸ்மிருதி. ராகுல் காந்தியிடம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பின்னர் ராஜ்யசபா எம்.பியான இவர், மத்திய அமைச்சர் ஆனார். 

இப்போது அவர் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஐந்தாம் கட்டமாக, மே 6 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வரும் 17ஆம் தேதி அங்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார் ஸ்மிருதி. ஆனால், அன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் விடுமுறை. இதையடுத்து  அவர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார்.

அதன்படி அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி வேட்பு ‌மனுத் தாக்கல் செய்துள்ளார். ஸ்மிருதி இரானி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது அவருடன் முதலமைச்சர் யோகி‌ ஆதித்யநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். வேட்பு மனுத் தாக்கல் செய்யச் செல்லும் முன் ஊர்வலமாக சென்ற ஸ்மிருதி‌ இரானி அப்பகுதியில் திரண்டிருந்த கட்சியினரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். 

முன்னதாக பொது மக்க‌ள் ‌மத்தியில் பேசிய ஸ்மிருதி இரானி‌, அமேதி மக்கள் தன்னை ஒரு வேட்பாளரா‌க பார்க்காமல் சகோதரி போல் பார்ப்பதாக தெரிவித்தா‌ர். இ‌தற்கு முன்னதாக ஸ்மிருதி ‌தனது கணவர் ஜூபின் இரானியுடன் இணைந்து சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com