“கார்த்தி சிதம்பரம் வேட்பாளரா? மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது” - சுதர்சன நாச்சியப்பன்

“கார்த்தி சிதம்பரம் வேட்பாளரா? மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது” - சுதர்சன நாச்சியப்பன்

“கார்த்தி சிதம்பரம் வேட்பாளரா? மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது” - சுதர்சன நாச்சியப்பன்

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது என்று சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 9 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்தது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இழுபறி நீடித்து வந்தது. கார்த்திக் சிதம்பரம் அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது. 

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்குவது என்ற முடிவினை ராகுல் காந்தி எடுக்க உள்ளதாக கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு குறைவுதான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து இருந்தார். இருப்பினும், சிவகங்கை வேட்பாளராக இன்று மாலை கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. 

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு சுதர்சன நாச்சியப்பன் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார். , “சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம்; ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள்” என்று சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com