கருணாநிதிக்குக் கொடுக்கப்படும் சிறந்த பிறந்த நாள் பரிசு எது தெரியுமா?.. சீத்தாராம் யெச்சூரி கருத்து

கருணாநிதிக்குக் கொடுக்கப்படும் சிறந்த பிறந்த நாள் பரிசு எது தெரியுமா?.. சீத்தாராம் யெச்சூரி கருத்து
கருணாநிதிக்குக் கொடுக்கப்படும் சிறந்த பிறந்த நாள் பரிசு எது தெரியுமா?.. சீத்தாராம் யெச்சூரி கருத்து

நாட்டின் மாற்றத்துக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பதே திமுக தலைவர் கருணாநிதிக்கு நாம் கொடுக்கும் சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்க முடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் பேசிய அவர், 75 ஆண்டுகளாக தொடர்ந்து பத்திரிகை துறையில் பணியாற்றி வருபவரை நான் பார்த்ததில்லை. தற்போதைய சூழலில் கருணாநிதியின் மதச்சார்பற்ற கொள்கைகள் மிகவும் அவசியம். அரசியல் ஆதாயத்துக்காக நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. தனியார் ராணுவத்தினர் ஆட்சி நடத்துகின்றனர். ஒரு கட்சி நாட்டின் ஒற்றுமையை சிதைத்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பாசிச ஆட்சி முறியடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மாற்றத்துக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அதுவே திமுக தலைவர் கருணாநிதிக்கு நாம் அளிக்கும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்க முடியும் என்று அவர் பேசினார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com