மைனர் தங்கையின் காதல் திருமணம்: தடுத்து நிறுத்திய அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்

மைனர் தங்கையின் காதல் திருமணம்: தடுத்து நிறுத்திய அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்

மைனர் தங்கையின் காதல் திருமணம்: தடுத்து நிறுத்திய அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்
Published on

மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே மைனர் பெண்ணின் காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்


சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள மாரிவளவு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமாரின் சித்தப்பா மகள் 17 வயது சிறுமியும், அவரது உறவினருமான அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.


இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காதலர்கள் இருவரையும் எச்சரித்து மைனர் பெண் என்பதால் சிறுமியை அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன் தனது காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமியின் அண்ணன் அருண்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.


இதனையடுத்து இன்று தனது நண்பர் ஹேம்நாத் என்பவருடன் சேர்ந்து மாரிவளவு அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்ற அருண்குமாரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து அருண்குமார் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் பாஸ்கரன், ஹேம்நாத் இருவரையும் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com