\
singer saindhavi video went viral on social media
saindhaviInstagram

“எனக்காக இந்த முடிவு எடுக்குறேன்” சைந்தவி அதிரடி வீடியோ! இன்ப அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

பாடகி சைந்தவி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

பொதுவாக ஒரு சில நட்சத்திர ஜோடிகள் விவகாரத்து செய்யும்போது, அதனை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நீங்கள் ஏன் பிரிகிறீர்கள். ஒன்றாகவே இருங்கள் என்று சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்தும் பதிவிடுவார்கள். அப்படியான ஜோடிகளில் ஒன்றாக தான் ஜி.வி.பிரகாஷ்-ம், சைந்தவியும் இருந்தார்கள். ஆனால், பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு, இருவரும் கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று, அதிகாரப்பூர்வமாக விவகாரத்து பெற்று பிரிந்தனர். என்னதான் பிரிந்துவிட்டாலும், இசைத்துறையில் இணைந்து பணியாற்றி வரும் இவர்கள், தங்களது குழந்தையையும் ஒன்றாக சேர்ந்தே வளர்த்து வருகிறார்கள்.

இப்படி இருப்பதால் தான் இவர்கள் இருவருக்கும் இணையத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படியான சூழ்நிலையில், பாடகி சைந்தவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறிய கருத்துகள், பல்வேறு பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாக மாறியுள்ளது. அதாவது, “சில நாட்கள் நமக்கு கூடுதலான உத்வேகம் தேவைப்படும். இது அதுமாதிரியான நாள் தான். கடந்த சில தினங்களாக, தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்துவிட்டு, கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். இப்போது தான், எனது முயற்சிக்கான பலன் கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஒரே நாளில் உடல் மாற வேண்டும் என்று நினைக்கவில்லை. இதுவொரு தொடக்கம் மட்டும் தான். இன்னும் நீண்ட பயணம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “நான் இதனை எனக்காக மட்டும் தான் செய்கிறேன். புதிதாக மாற இருக்கும் எனக்காக மட்டுமே இந்த பயணத்தை தொடங்கியுள்ளேன்” என்றும் கூறியுள்ளார். உடல் எடையை குறைக்கும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பாடகி சைந்தவி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரது புதிய பயணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தோல்விகள் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் பாதியிலேயே விட்டுச் செல்லலாம். ஆனால், நம்மை நாம் கவனித்துக் கொள்வது முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், சைந்தவியின் இந்த பதிவு இருப்பதாகவும், பல்வேறு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில், உடல் எடையை குறைத்துவிட்டு, Transformation வீடியோவை வெளியிடுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

singer saindhavi video went viral on social media
“உயிரோடு விட்டதற்கு நன்றி!” – பாடகி சின்மயி சரமாரிக் கேள்வி!