ராகுலுக்காக சுருக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல்: வெடித்தது சர்ச்சை

ராகுலுக்காக சுருக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல்: வெடித்தது சர்ச்சை

ராகுலுக்காக சுருக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல்: வெடித்தது சர்ச்சை
Published on

கர்நாடகாவில் ராகுல் காந்தி கலந்துக் கொண்ட கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் ஒரு வரி மட்டும் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் செய்யும் தவறுகளை பரப்புவதில் ஒவ்வொரு கட்சியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக தங்களது ஐடி பிரிவை எல்லோரும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். இதில் பலமுறை பாஜக தலைவர்கள் சிக்கியுள்ளனர். இந்த முறை ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. 

பண்ட்வால் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. மேடையில் பாடியவர்கள் ஒரே ஒரு வரி மட்டும் பாடி நிறுத்தினர். பாடல் ஒரு வரியுடன் நிறுத்தப்பட்டதால் கூட்டத்தில் இருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். பாடல் நிறுத்தப்பட்டதற்கான காரணம் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு புரியவில்லை. 

பின்னர் தான், ராகுல் காந்திக்கு நேரமின்மை காரணமாக பாடலை ஒரு வரிமட்டும் பாடுமாறு காங்கிரஸ் தலைவர்கள் அறிவுருத்தியது தெரியவந்தது. கூட்டத்தில் நடந்ததை கர்நாடகா சேனல் ஒளிபரப்பியது. அதில், ராகுல் காந்தி தனது கடிகாரத்தை காட்டி கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளரான கே.சி.வேணுகோபாலிடம் சைகை காட்டுகிறார். பாடகர்கள் மேடைக்கு வந்ததும் அவர்களிடம் ஒரு வரியில் பாடலை பாடுமாறு வேணுகோபால் வலியுறுத்துகிறார். பின்னர் எல்லோரும் எழுந்து பாடலுக்கு நிற்கிறார்கள். சில நொடிகளில் பாடல் முடிகிறது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

“வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை செலுத்த ராகுல் காந்திக்கு நேரம் இல்லையெனில், விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை மதித்து அவர் அரசியலை விட்டு விலக வேண்டும்” என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com