ட்விட்டரில் மல்லுக்கட்டும் கர்நாடகா முன்னாள், இந்நாள் முதல்வர்கள்

ட்விட்டரில் மல்லுக்கட்டும் கர்நாடகா முன்னாள், இந்நாள் முதல்வர்கள்
ட்விட்டரில் மல்லுக்கட்டும் கர்நாடகா முன்னாள், இந்நாள் முதல்வர்கள்
Published on

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மிகப்பெரிய பொதுக்கூட்டம் நேற்று கர்நாடகாவில் நடைபெற்றது. பிரதமர் பங்கேற்க வருகிறார் என அறிந்து கொண்ட கர்நாடகா முதல்வர் சித்தராமையா , இந்தியாவின் முதன்மை மாநிலத்துக்கு வருக திரு.மோடி என்று ஒரு ட்விட்டை தட்டிவிட்டார். அதோடு நிற்காமல், கண்டுபிடிப்புகள், தொழில்துறை என பல்வேறு முக்கிய துறைகளில் முதலிடம் பிடித்த, கர்நாடகாவால் நாடே பெருமை அடைகிறது என்ற அவர், மகதாயி நதிநீர் விவகாரத்தை சரிசெய்ய உதவுங்கள் என்ற கோரிக்கையையும் வைத்தார்.

ட்வீட்டை பார்த்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தட்டினார் ஒரு ட்வீட்.

பிரதமரை வரவேற்றமைக்கு நன்றி சித்தராமையா. ஊழல், லஞ்சம், நேர்மையான அதிகாரிகளை பந்தாடுவது, கொன்று குவிப்பது, சட்டம் & ஒழுங்கே இல்லாதா என பல்வேறு பிரிவுகளில் முதலிடம் வகிக்கும் கர்நாடகாவை உருவாக்கியிருக்கிறீர்கள் என்றார்.

சும்மா இருப்பாரா சித்தராமையா, தன் பங்குக்கு எடியூரப்பாவுக்கு ஒரு ட்வீட்டை தட்டினார். ஊழல், லஞ்சம் பற்றி எல்லாம் யாரு பேசுறது மிஸ்டர் எடியூரப்பா? இந்தியாவின் மிகப்பெரிய கனிம ஊழலை தன் ஆட்சியில் நிகழ்த்திக் காட்டிய நீங்களா? கர்நாடகாவின் வளர்ச்சியை விரும்பாதா ஒருவரால் மட்டுமே, வளர்ச்சியடைந்த மாநிலத்தை எள்ளி நகையாட முடியும் என்று பதிலளித்தார்.  

அவ்வளவுதான் எடியூரப்பா எஸ்கேப்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com