சட்டப்பேரவை வளாகத்தில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏக்களுக்கான அறையையே சட்டப்பேரவை நடைபெறும் நாட்களில் தன்னுடைய அலுவல்களுக்காக பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்க சட்டப்பேரவை அலுவலகம் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறைக்கு அருகிலேயே ஸ்டாலினுக்கும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.