டிரெண்டிங்
டெங்குவை கட்டுப்படுத்த 300 வீடுகளுக்கு ஒரு குழு: எஸ்.பி.வேலுமணி
டெங்குவை கட்டுப்படுத்த 300 வீடுகளுக்கு ஒரு குழு: எஸ்.பி.வேலுமணி
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த 300 வீடுகளுக்கு ஒரு குழு என பிரிக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்ற அக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர், போர்க்கால அடிப்படையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி, பேரூராட்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். காய்ச்சலை கட்டுப்படுத்த மனிதாபிமான அடிப்படையில் உள்ளாட்சித்துறை பணியாற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.