மோசடி புகாரில் தேடப்படும் செந்தில் பாலாஜி

மோசடி புகாரில் தேடப்படும் செந்தில் பாலாஜி
மோசடி புகாரில் தேடப்படும் செந்தில் பாலாஜி

மோசடி புகாரின் பேரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் பதவி காலத்தின் போது, வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.25 கோடி முறைகேடு செய்ததாக ‌புகார் எழுந்துள்ளது. மேலும் ரூ.1.17 கோடி மோசடி செய்ததாகவும் போக்கு‌வரத்து துறை உதவி மேலாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை தேடி ‌கர்நாடகா மாநிலம் ‌குடகுகிற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்றுள்ளனர். டிடிவி தினகரன் ஆதவாளரான செந்தில்பாலாஜி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com