சுயேச்சையாக மனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து நீக்கம்

சுயேச்சையாக மனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து நீக்கம்

சுயேச்சையாக மனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து நீக்கம்
Published on

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகரனை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் சந்திரசேகரன். இவர் இந்த முறையும் போட்டியிட அதிமுகவில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரன் என்பவருக்கு அதிமுக வாய்ப்பு அளித்தது.

இதனால் அதிருப்தியில் இருந்த தற்போதைய எம்.எல்.ஏ சந்திரசேகரன் இன்று சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகரனை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்வதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com