\
முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் மூத்த அமைச்சர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக உயர்நிலை இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் வருகையின்போது ஆதரவாளர்கள் தனித்தனியாக வாழ்த்து முழக்கம் எழுப்பினர். இந்த விவகாரம் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அதிமுக செயற்குழு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையிலுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களான தங்கஅனி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆலோசனையில் பேசப்படலாம் எனத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com