பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து குழு அமைத்து ஆலோசனை: செங்கோட்டையன்
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ., பொன்முடி பேரவையில் கூறினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாகவும், குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு கானப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சீனியாரிட்டி அடிப்படையில் பகுதி நேரப் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்றுவரை பணி நிரந்தரம் மற்றும் சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.