தான் வன்முறையை விரும்பாதவன் என கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டியதாக, அரவக்குறிச்சி பாரதிய ஜனதா வேட்பாளர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிப்பேன் எனப் பேசியிருந்தார்.
தனக்கு இன்னொரு முகம் இருக்கிறது, அது கர்நாடக முகம், அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றும் பரப்புரையின் போது கூறினார். அண்ணாமலை மிரட்டும் தொனியில் பேசியது குறித்து, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பேசிய செந்தில் பாலாஜி, வன்முறையை தூண்டும் வகையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசிவருகிறார். நான் வன்முறையை விரும்பாதவன், கடினச் சொல் பேசாதவன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.