\
அழகிரி இருந்திருந்தால் நெருக்கடி: செல்லூர் ராஜூ தகவல்

அழகிரி இருந்திருந்தால் நெருக்கடி: செல்லூர் ராஜூ தகவல்

அழகிரி இருந்திருந்தால் நெருக்கடி: செல்லூர் ராஜூ தகவல்
Published on

திமுகவின் செயல் தலைவராக மு.க.அழகிரி இருந்திருந்தால், அதிமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ, மு.க.ஸ்டாலின் தலைமையில் இருப்பதால் எதிர்க்கட்சி வலுவற்ற நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் தற்போதுள்ள எதிர்க்கட்சியால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஸ்டாலினுக்கு பதிலாக அழகிரி இருந்திருந்தால் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு அதிமுகவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்திருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்டாலின் சுயமாக செயல்படக்கூடியவர் இல்லை என்றும், அவரை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com