சென்னை: 3 நாட்களில் ரூ.13,74,710 மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

சென்னை: 3 நாட்களில் ரூ.13,74,710 மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

சென்னை: 3 நாட்களில் ரூ.13,74,710 மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்
Published on

சென்னையில் பறக்கும் படையினரால் கடந்த 3 நாட்களில் 13,74,710 மதிப்புள்ள பணம் மற்றும் லேப்டாப் கைபேசி போன்ற பொருட்கள் பறிமுதல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி முதல் இந்த பறக்கும் படை இருபத்திநான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் சென்னையில் ரோந்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தனிநபர் ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது. அதேபோல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் கடந்த 3 நாள்களில் 2 லட்சத்து 24ஆயிரத்து710 ரூபாய் ரொக்க பணம் மற்றும் ரூ.11,50,000 ஆயிரம் மதிப்புள்ள 15 லெப்டாப் மற்றும் 40 மொபைல்கள் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 13லட்சத்து 74 ஆயிரத்து 710 ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் லேப்டாப், கைபேசி போன்ற பொருட்கள் உரிய ஆவணம் இல்லாத காரணத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com