கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு

கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு

கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களை, மார்ச் 7 ஆம் தேதி ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார் சீமான். இதில் 117 ஆண் வேட்பாளர்களுக்கு இணையாக, சம உரிமை என்ற அடிப்படையில் 117 பெண்களைக் களமிறக்குகிறார் சீமான்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும், எடப்பாடி தொகுதியில் ஸ்ரீரத்னா என்ற பெண் போட்டியிடுவார் எனவும், ஓபிஎஸ் போட்டியிடும் போடியில் பிரேமச்சந்திரன் என்பவர் போட்டி எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூரில் சீமான் போட்டி என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட சீமான் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com