“மன்சூர் அலிகான் சொல்வதை ஏற்க முடியாது; ஏன் பொய் சொல்லணும்?” - சீமான் கேள்வி

“மன்சூர் அலிகான் சொல்வதை ஏற்க முடியாது; ஏன் பொய் சொல்லணும்?” - சீமான் கேள்வி
“மன்சூர் அலிகான் சொல்வதை ஏற்க முடியாது; ஏன் பொய் சொல்லணும்?” - சீமான் கேள்வி

"மன்சூர் அலிகான் தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என சொல்வதை ஏற்க முடியாது" என்று 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

'புதிய தலைமுறை' சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீமானிடம், மன்சூர் அலிகான் விலகல் குறித்து நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், “ராஜீவ்காந்தியையும் கலியாண சுந்திரத்தையும் நாம் விலக்கினோம். ஆனால் மன்சூல் அலிகான் அண்ணன் அவராகவே சென்றுவிட்டார்.

'அவர் தொகுதி ஒதுக்கவில்லை. அதனால் விலகினேன்' என சொல்வதை ஏற்க முடியாது. நான் தொகுதி கொடுத்தேன். ஏன் பொய் சொல்லணும்? பட்டுக்கோட்டை தொகுதியை கேட்டார். ஆனால், அங்கு ஏற்கெனவே தங்கச்சியை நிற்க சொல்லி வேலை செய்ய விட்டுட்டேன். அவரைத் திரும்ப பெறுவது என்பது சாத்தியமில்லை. அதனால் சேப்பாக்கம் தொகுதியில் நிற்குமாறு கூறினேன். அந்த தொகுதியையும் கொடுத்துவிட்டேன். அங்கு என் ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் அதிகம். அனைவரும் எனது சொந்தம்தான். மன்சூர் அலிகானும் எனது ஊரில்தான் பெண் எடுத்துள்ளார். அதனால் அங்கு நிற்க சொன்னேன். ஒரு நாள் களத்திற்கு சென்று வேலை பார்த்தார். பின்னர்தான் திடீரென்று புதுக்கட்சி தொடங்குகிறேன் என செல்கிறார். அதுதான் வருத்தம்” என்றார் சீமான்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் சீமான் தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை எனவும், இது வருத்தத்தை தருவதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். மேலும், தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை அவர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com