சசிகலா குடும்பம் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாதா?: சீமான் கேள்வி

சசிகலா குடும்பம் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாதா?: சீமான் கேள்வி

சசிகலா குடும்பம் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாதா?: சீமான் கேள்வி
Published on

சசிகலா குடும்பத்தினர் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாமலா இருந்திருக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து முடிந்த நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சோதனை நடைபெற்றது. இதுதொடர்பாக சீமான் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த சோதனைக்கு காரணம் வெளிநோக்கமே, உள்நோக்கமல்ல என கூறினார். 

தினகரன், சசிகலா குடும்பத்தை அச்சுறுத்துவதற்கும் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்குத்தான் இப்படி செய்கிறார்கள்.நான்கு முறை ஆட்சியில் இருந்த போது சோதனை நடத்தாமல் இப்பொழுது ஏன் நடத்த வேண்டும்?சசிகலா குடும்பத்தினரிடம் மட்டும்தான் சொத்துக்கள் உள்ளதா? 

சசிகலா குடும்பத்தினர் சொத்துக்கள் சேர்ப்பதற்கு அமைச்சர்கள்தான் வசூலித்து கொடுத்தனர். ஆனால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தாமல் சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் மட்டும் சோதனை நடத்துவதுதான் சந்தேகம் அளிக்கிறது.

முதலில் சோதனை நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள். அது போலத்தான் இதுவும் என்றுதான் மக்கள் நினைப்பர்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதுதான் சசிகலா குடும்பத்தினர் சொத்து சேர்த்துள்ளனர் என்றும் சீமான் கூறினார். சசிகலா குடும்பத்தினர் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாமலா இருந்திருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com