பணநாயகத்தால் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது: சீமான் தாக்கு

பணநாயகத்தால் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது: சீமான் தாக்கு

பணநாயகத்தால் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது: சீமான் தாக்கு
Published on

பணநாயகத்தின் காரணமாக ஜனநாயகத்தில் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆர்.கே.நகர் நகரில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பரப்புரை செய்து வருகிறார். அப்போது புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், பணநாயகத்தின் காரணமாக ஜனநாயகத்தில் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை குறைந்து விட்டதாக கூறினார். பணம் கொடுப்பதாக நிரூபணம் ஆகும் வேட்பாளரை 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய சீமான், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, ஆர்.கே.நகரில் ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக திமுக குற்றம்சாட்டிவருகிறது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com