மேற்கு வங்கம், அசாமில் இரண்டாம் கட்ட தேர்தல் துவக்கம்!

மேற்கு வங்கம், அசாமில் இரண்டாம் கட்ட தேர்தல் துவக்கம்!

மேற்கு வங்கம், அசாமில் இரண்டாம் கட்ட தேர்தல் துவக்கம்!
Published on

அசாமில் இன்று 39 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத்தேர்தல் துவங்கி உள்ளது. 26 பெண்கள் உட்பட 345 வேட்பாளர்கள் 2 ஆம் கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

தேர்தல் நடக்கும் 39 தொகுதிகளில், காங்கிரஸ் மெகா கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் 25 தொகுதிகளில் நேரடிப்போட்டி நிலவுகிறது. மற்ற தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. 5 அமைச்சர்கள், துணை சபாநாயகர் உட்பட 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 73,45,000 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 10,592 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 310 கம்பெனி மத்தியபடைகள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், மேற்கு வங்கத்திலும் இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com