\
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி
Published on

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நேர்காணலோ அல்லது தேர்வோ நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவசர சுற்றிக்கை ஒன்றை மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். அதில், திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எந்தவொரு எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத் தேர்வோ மற்றும் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விபரம் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் அறிவிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com