"முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்" - சத்யபிரதா சாஹு

"முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்" - சத்யபிரதா சாஹு
"முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்" - சத்யபிரதா சாஹு

முதியோர், மாற்றுத்திறனாளிகள் காத்திருக்காமல் விரைந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

100 சதவீத வாக்குபதிவை இலக்காக கொண்டே தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை நேரலையில் நேயர்களின் கேள்விகளுக்கு பிரத்யேகமாக பதிலளித்த அவர், தேர்தலில் வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் VVPAT இயந்திரம் உள்ளதாகவும் அதன்மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை உறுதிபடுத்தலாம் என்றும் சத்தியபிரதா சாஹு தகவல் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஒன்றை கட்டாயமாக உடன் எடுத்துச்செல்ல வேண்டும், பூத் சிலிப் என்பது ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருள்கள் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் திரும்ப ஒப்படைக்கப்படுவதாகவும் சத்தியபிரதா சாஹு குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com