ரஜினிக்கு வலது கை விரலில் மை - அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி

ரஜினிக்கு வலது கை விரலில் மை - அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி

ரஜினிக்கு வலது கை விரலில் மை - அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி
Published on

தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். 

தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினி காந்த் சென்னை  ராணி மேரி கல்லூரியிலுள்ள தன்னுடைய வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அப்போது, ஏராளமான ரசிகர்கள் அவர் வாக்களிக்க வந்தபோது வாக்குச் சாவடி அருகே குவிந்தனர். ரஜினி வாக்களித்த பின்னர் அவரது வலது கை விரலில் வாக்களித்தற்கான அடையாளமான மை வைக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில், ரஜினியின் மை விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ‘இடது கைக்கு பதில் தவறுதலாக ரஜினியின் வலது கை விரலில் ஊழியர் மை வைத்திருக்கலாம். ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும். ரஜினி வாக்களித்த போது அதிக ரசிகர்கள் வாக்குச் சாவடிக்கு வந்தது தொடர்பாகவும் அறிக்கை கேட்கப்படும்’ என்று கூறினார். 

அதேபோல், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த நடைமுறைகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com