\
சுவாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் வந்த சசிகலா: சிறப்பான வரவேற்பு அளித்த அமமுக வேட்பாளர்கள்

சுவாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் வந்த சசிகலா: சிறப்பான வரவேற்பு அளித்த அமமுக வேட்பாளர்கள்

சுவாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் வந்த சசிகலா: சிறப்பான வரவேற்பு அளித்த அமமுக வேட்பாளர்கள்
Published on

சுவாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் வந்த சசிகலாவிற்கு அமமுக வேட்பாளர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சிறையில் இருந்து வெளிவந்த பின்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மும்மத வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை நாகையில் 3 மும்மத வழிபாடுகளை முடித்துக் கொண்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ராமநாதபுரத்திற்கு வருகை புரிந்தார்.

இராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அவருக்கு, ராமநாதபுரம் அமமுக வேட்பாளர் முனியசாமி மற்றும் திருவாடானை அமமுக ஆனந்த் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்டு தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை புரிந்த அவருக்கு ராமேஸ்வரம் நகர் அமமுக நிர்வாகிகள் குருத்தோலை வழங்கி வரவேற்பளித்தனர்.

இதையடுத்து நாளை காலை ராமேஸ்வரம் கோவிலில் நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டு ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி சாமிதரிசனம் செய்ய உள்ளார். என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com