\
சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்

சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்

சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்
Published on

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டர். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதால் அதற்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சசிகலாவின் சகோதரி மகனான டிடிவி தினகரன் கூறிவந்தார். இந்த நிலையில், நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த சில மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் கல்லீரலில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்னையால், கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் பாதிப்பும் அவருக்கு உள்ளதால், நடராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் முகமது ரெலா தலைமையிலான மருத்துவர் குழு நடராஜனுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com