சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி

சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி

சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 வருட சிறை தண்டனையும் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜெயலலிதா மறைந்து விட்டதால், அவரைத் தவிர சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அவர்கள் மூவரும் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். மறு சீராய்வு மனுக்கள் நீதிபதிகளின் அறையில்தான் விசாரிக்கப்படும் எனும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமித்வராய், சரத் பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற வளாகத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தது. அறையிலேயே விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தாங்கள் எந்தக் குறையும் காணவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சசிகலா உள்ளிட்டோருக்கான சிறை தண்டனை மற்றும் அபராதம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

முன்னாள் முதலமைச்ச ஜெயலலிதா மறைவையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வந்தன. எனவே தங்கள் மீதான குற்றச்சாட்டுகள், தண்டனை ஆகியவற்றையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் தங்கள் சீராய்வு மனுவில் கோரியிருந்தனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளி ஜெயலலிதா மக்கள் சேவகர், அவரே மரணமடைந்த பிறகு வழக்கும் முடிவுக்கு வந்தது என்றும் இதனையடுத்து தனித்த குடிமகன்களான தங்கள் மீதான குற்றச்சாட்டு, தண்டனையைத் தக்க வைக்க முடியாது என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தவொரு பிழையையும் நாங்கள் காணவில்லை. ஆவணங்களிலும் தோற்ற அளவில் கூட பிழையில்லை எனவே சீராய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று கூறி தள்ளுபடி செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com