இன்று சிறைக்கு திரும்புகிறார் சசிகலா

இன்று சிறைக்கு திரும்புகிறார் சசிகலா

இன்று சிறைக்கு திரும்புகிறார் சசிகலா
Published on

சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறை வழங்கிய 5 நாள் பரோல், நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்குள் அவர் சிறைக்கு திரும்ப உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த சசிகலா, தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி பரோல் கேட்டிருந்தார். அவருக்கு சிறைத்துறை கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பரோல் வழங்கியிருந்தது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி மாலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள உறவினர் இல்லத்தில் தங்கி வருகிறார். அவருக்கு சிறைத்துறை வழங்கிய பரோல் அவகாசம் நேற்றோடு முடிவடைந்தது.

சசிகலா இன்று மாலை 6 மணிக்குள் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்க வேண்டுமென ஏற்கெனவே சிறைத்துறை தனது பரோல் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதனால் அவர் இன்று மாலைக்குள் சிறைக்கு திரும்ப உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com