ஸ்டெர்லைட்டை தடை செய்: சசிகலா எம்பி போராட்டம்

ஸ்டெர்லைட்டை தடை செய்: சசிகலா எம்பி போராட்டம்
ஸ்டெர்லைட்டை தடை செய்: சசிகலா எம்பி போராட்டம்

திருமணம் முடிந்து அடுத்த நாளே ஸ்டெர்லைட் போராட்டத்தில் எம்பி சசிகலா புஷ்பா ஈடுபட்டார். 

‌தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரத்தில் 44வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் அங்கேயே சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரவிலும் தங்கி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள் தங்களுடைய கைக்குழந்தைகளுடன் ‌இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த எம்பி சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் ஸ்டெர்லைட்க்கு எதிராக பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதில், நச்சு வாயு உயிரைக் கொல்கிறது. தமிழ்நாட்டில் ஸ்டெர்லெட்டை தடை செய் என்று எழுப்பத்தப்பட்டிருந்தது. சசிகலா புஷ்பாவிற்கும், ராமசாமிக்கும் டெல்லியில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமண புதுப்பெண்ணான சசிகலா புஷ்பா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சசிகலா புஷ்பா ஏற்கனவே விவாகரத்துப் பெற்ற நிலையில், இந்த புதுத்திருமணம் நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com