டிரெண்டிங்
சோதனையில் சிக்கிய ஆவணங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் - திருநாவுக்கரசர்
சோதனையில் சிக்கிய ஆவணங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் - திருநாவுக்கரசர்
கடந்த சில நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இந்திரா காந்தியின் 100வது பிறந்தநாளையொட்டி சென்னை யானைக்கவுனியில் உள்ள அவரது சிலைக்கு திருநாவுக்கரசர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய திருநாவுக்கரசர், கடந்த 6 நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவற்றின் விவரங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.