\
சசிகலா பரோல் மனு நிராகரிப்பு? புகழேந்தி மறுப்பு

சசிகலா பரோல் மனு நிராகரிப்பு? புகழேந்தி மறுப்பு

சசிகலா பரோல் மனு நிராகரிப்பு? புகழேந்தி மறுப்பு
Published on

சசிகலா பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக்கூறி சசிகலா சார்பில் கர்நாடக சிறைத்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நிராகரிப்பட்டுவிட்டதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சசிகலா பரோல் மனு நிராகரிப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என தெரிவித்தார். சசிகலா பரோல் கோரிக்கை மனு இன்னும் கர்நாடக சிறைத்துறையின் பரிசீலனையில்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com